2018 ஆம் ஆண்டுக்குள் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் உருவாகுமா? பிரபல ஜேதிடர்கள் கணிப்பு!

0
2856

இந்தியா பாகிஸ்தான் இடையே 2017, 2018 ஆம் ஆண்டுகளில் போர் உருவாகும் என ஜோதிடர்கள் கூறியுள்ளனர். கடந்தாண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேர்டு ஐ என்ற ஆன்மிக ஆய்வு நிறுவனத்தின் சார்பில் ஜோதிடர்கள் மாநட்டில் இது பகிரங்கமாகவே தெரிவிக்கப்பட்டது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 2017, 2018ஆம் ஆண்டுகளில் போர் மூளுவதற்கான சூழல் ஏற்படும்.

எண் கணிதப்படி காஷ்மீரின் பெயரை மாற்ற வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் காஷ்மீர் பிரச்சனை முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

எதிர்காலத்தில் இந்தியா இயற்கை அழிவுகளை சந்திக்கும் என்றும் ஆரூடர்கள் கணித்திருந்தனர். அதே போல நிகழும் காலக்கட்டங்களில் நாடு இயற்கை பேரிடர்களையும், அழிவுகளையும் சந்தித்து வருகிறது.

‘நாட்டின் வளர்ச்சிக்கு ஜோதிடத்தின் வழியாக வழி காணப்படும். காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க அந்த மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் ஆரூட மாநாட்டில் கோரப்பட்டது. ஆனால் அதற்கான முன்னெடுப்புகளை இந்தியா இன்னும் துவங்கவில்லை.