2018 புத்தாண்டு ராசிபலன்: சிம்ம ராசிக்கு இது பொன்னான வருடம்… ஸ்பெஷல் என்ன?

0
5982

சூரியனை ராசிநாதனாக கொண்டிருக்கும் சிம்ம ராசிக்கார்களே, இந்த ஆண்டு உங்கள் வாழ்நாளில் ஒரு பொன்னான வருடம் என்றுதான் சொல்ல வேண்டும்.

குரு மூன்றாம் வீட்டிலும், கேது ஆறாம் வீட்டிலும், ராகு பன்னிரண்டிலும் கோச்சாரம் செய்கின்றன. இதனால் உங்களுக்கு நிச்சயமாக பலன்கள் உண்டு. இதுவரை உங்களை பீடித்திருந்த கஷ்டங்கள் எல்லாம் விலகி ஓடும். புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். கடவுள் பக்தி அதிகரிக்கும். சில மகான்களை சந்திக்கும் சந்தர்ப்பங்களும் கூட ஏற்படலாம்.

2018 புத்தாண்டு ராசிபலன்: சிம்ம ராசிக்கு இது பொன்னான வருடம்..ஸ்பெஷல் என்ன?

குடும்பம்:
உடன் பிறந்தவர்களுடனான பாசமும் இணக்கமும் அதிகரிக்கும் ஆண்டு இது. நண்பர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். உங்கள் செயல்களை உறவினர்களும், நண்பர்களும் ஆதரித்து துணை வருவார்கள். வாழ்க்கைத்துணை உங்களை முழுமையாக புரிந்து கொண்டு செயல்படுவார்.

2018 புத்தாண்டு ராசிபலன்: சிம்ம ராசிக்கு இது பொன்னான வருடம்..ஸ்பெஷல் என்ன?காதல்:
இந்தாண்டு காதல் கைகூடும் அல்லது காதலர்கள் இடையேயான இணக்கமும் அரவணைப்பும் அதிகரிக்கும். ஆனாலும் சில சில சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால், சற்று ஜாக்கிரதையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.

 

2018 புத்தாண்டு ராசிபலன்: சிம்ம ராசிக்கு இது பொன்னான வருடம்..ஸ்பெஷல் என்ன?அலுவலகம்:
வருடத்தின் மத்தியில் சில பிரச்சினைகள் எழலாம். குறிப்பாக அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் சற்றே நாவை அடக்கி ஆள வேண்டிய சூழல் இது. அனாவசிய பிரச்சினைகளில் தயவு செய்து தலையிடாதீர்கள். எந்த பிரச்சினையையும் பெரிது படுத்தாமல் தீர்வு காண முயல வேண்டும்.