11 ஆயிரம் கோடியை சுருட்டிக்கொண்டு சுவிஸ் நாட்டில் ஒளிந்துள்ள குஜராத் வைர வியாபாரி!

0
1325

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடத்தப்பட்டுள்ள விவகாரம் வெட்ட வெளிச்சதிற்கு வந்துள்ளது.

பஞ்சாம் நேஷனல் வங்கி, பங்குச்சந்தை (BSE) அனுப்பியுள்ள அறிக்கையில் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

குஜராத் வைர வியாபாரி நீரவ் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ. 11.360 கோடி ரூபாய் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்து விட்டு மல்லையா ஸ்டைலில் இந்தியாவை விட்டு ஓடியுள்ளார். இது தொடர்பாக வங்கியின் தலைமை சி.பி.ஐ.யிடம் புகார் அளித்திருக்கிறது.

இதையடுத்து சி.பி.ஐ. வைர வியாபாரி நீரவ் மீது வழக்குகளை தொடுத்துள்ளது. தற்போது நீரவ் சுவிட்சர்லாந்தில் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. அவரை கைது செய்து இந்தியா அழைத்துவர இன்டர்போல் சி.பி.ஐ. உதவியை விரைவில் நாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

உங்க கருத்தை தெரிவிக்கலாம்