வேலியே பயிரை மேய்ந்த சோகம்… சிரியா பெண்களை சூறையாடிய ஐ.நா. அதிகாரிகள்!

0
962

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே போர் நடைப்பெற்று வருகிறது. இதில் பல அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். பலரும் படுகயங்கள் அடைந்துள்ளனர். சிரியாவில் உள்ள மக்கள் கடுமையான கொடுமையான இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.

ஐநா அதிகாரிகள் பலர் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் உடலுறவில் ஈடுபட்டால் மட்டுமே மருத்துவ உதவி மற்றும் உணவு கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் உதவிகள் கொடுக்கப்படும் இடத்திற்கு பெண்களா யாரும் செல்வதில்லை. அங்கு உதவிகள் பெற்றால் உடலுறவு வைத்துக் கொண்டவர்களாக நினைப்பார்கள் என்று அங்கு பெண்கள் செல்வதை தவிர்க்கின்றனர். மருத்துவ உதவிகளையும் உணவுகள் பெறாமல் உள்ளனர். இதனால் பல பெண்கள் பட்டினியில் கிடந்தும் இருக்கிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல் அங்கு வந்து இருக்கும் உதவிப்படை அதிகாரிகள், சில பெண்களை திருமணமும் செய்கிறார்கள். ஆனால் இது தற்காலிக திருமணம் மட்டுமே. அந்த பெண்ணின் குடும்பத்திற்கு உதவிகள் கிடைக்கவேண்டும் என்றால் இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

இந்த உதவி செய்யும் பணியாளர்கள் பெண்களை பைக், காரில் வைத்து தங்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் வீட்டில் அந்த பெண்களை வேலை செய்ய வைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்களை பாலியல் உறவுக்கும் காட்டாயமாக்கப்படுகின்றனர்.

இந்த கொடுமைகளை ஐநா அனுப்பி இருக்கும் உதவிக்குழுவில் உள்ள ஆண்கள்தான் செய்கின்றனர். ஆனால் ஐநா இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்