சீதையை ஏன் கடத்தினார் ராவணர்? உண்மையை உடைக்கும் ராவண காவியம்!

0
6524

பலருக்கும் இந்த தலைப்பை கேட்டதுமே அதிர்ச்சியாக தான் இருக்கும். தன்னுடைய தங்கையை அவமானப்படுத்தியதற்காக, இராவணன் சீதா தேவியை ஒரு காட்டிலிருந்து கடத்திக் கொண்டு சென்றான் என்பது நாம் அனைவரும் கேட்டறிந்த இராமயணக் கதை. சீதா பூமியிலிருந்து பிறந்தவள் அவளை ஜனஜ மகாராஜன் நிலத்தை தோண்டிக் கொண்ருக்கும் போது சீதாவை கண்டறிந்தார் என்பதும், அவளை தம் மகளாக வளர்த்தார். பின் இராமனை மணமுடித்து வனவாசம் சென்று இராவணால் சிறை பிடிக்கப்பட்டு, இராமன் போர் புரிந்து சீதையை மீட்டார் என்பது தான் நாம் படித்து தெரிந்து கொண்ட வரலாறு.

இந்த இதிகாசங்கள் உண்மையான எழுத்து வடிவங்களாக மட்டுமின்றி, செவிவழிக் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் ஆகிய வடிவங்களிலும் வசீகரத்தையும், தோற்றத்தையும் வெளிப்படுத்தி வருகின்றன. சில நூல்களில் ஜனகரின் உண்மையான மகள் சீதா தேவி என்றும் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான கதைகளில் சீதா தேவி நிலத்திலிருந்து கண்டு தத்தெடுக்கப்பட்டு வாழ்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

ப்ளாஷ் பேக்:
வேதவதியின் மறு அவதாரம் தான் சீதா தேவி என்று சொல்லும் கதைகளும் உள்ளன. இராவணனால் துன்புறுத்தப்பட்ட பிராமண பெண்ணின் பெயர் தான் வேதவதியாகும். இராவணன் தன்னை அவமானப்படுத்தியவுடன், அவள் தன்னை சிதையில் ஏற்றிக் கொண்டு, வஞ்சம் தீர்க்கும் விதமாக மீண்டும் சீதையாக பிறந்தாள் என்று சொல்கிறது இந்தக் கதை.

ஆரூடர்கள் கணிப்பு:
உத்தர புராணத்தின் படி, அழகாபுரியின் இளவரசியான மனிவதியின் மேல் இராவணன் தவறான வகையில் ஆசை கொண்டிருந்தார். இதற்காக அவள் இராவணனைப் பழிவாங்க எண்ணினாள். பிற்காலத்தில், இராவணன் மற்றும் மண்டோதரி தம்பதியரின் மகளாக மீண்டும் பிறந்தாள். ஆனால், அந்தக் குழந்தை இராவணனின் சாம்ராஜ்யத்திற்கு பேரழிவைக் கொண்டு வரும் என்று சோதிடர்கள் குறிப்பிட்டார்கள்.

மிதிலாவில் சீதை:
எனவே, இராவணன் அந்த குழந்தையைக் கொன்று விடுமாறு தன்னுடைய பணியாளிடம் சொல்லி விட்டார். ஆனால், அந்த பணியாள், குழந்தையைக் கொல்லாமல் மிதிலாவில் புதைத்து விட்டான். அப்பொழுது தான் சீதை ஜனகரால் கண்டெடுக்கப்பட்டாள்.