தமிழகத்தில் ஏன் மதக்கலவரத்தை தூண்ட முடியாது? 5 காரணங்கள்!

0
7639

ஒவ்வொரு தமிழனின் மனதிலும் பெரியார் சிந்தனைகள் இருக்கும் வரை தமிழகத்தில் மதச்சண்டைகள் ஏற்படாது. இறைமறுப்புக் கொள்கையை இங்கே பெரும்பாலானோர் பின்பற்றாமல் வாழ்கின்றனர் என்றாலும் பகுத்தறிவுக் கொள்கை தழைத்தோங்கி இருக்கிறது. மாலை போட்டுக்கொண்டு மலைக்கு போனாலும், பெரியார் கொள்கைகளை விரும்பக்கூடிய மனிதர்கள் பலர்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தில் இந்துக்கள் பெரும்பான்மை வகித்தாலும், இந்துத்துவா எதிர்ப்புக் கொள்கை இங்கே பிடிப்புடன் திகழ்கிறது. கடவுளுக்கும், இந்துத்துவாவிற்கும் இடையேயான வேறுபாட்டை ஒவ்வொருவரும் அறிவர். திராவிடக் கழகத்தின் கடைசி உறுதியான தலைவர் இருந்த வரை ஆர்.எஸ்.எஸ். பேரணியே இங்கு நடந்தது கிடையாது.

திராவிட அரசியல் தற்போதே ஊழல் மிகுந்ததாக விமர்சிக்கப்பட்டாலும், தமிழக மக்களுடைய அரசியல் பார்வையை தெளிவாக்கியது அதன் தலைவர்கள்தான். பெரியார், அண்ணாதுரையில் இருந்து ஜெயலலிதா வரை ஒவ்வொருவரும் தமிழக அரசியலின் அசைக்கமுடியாத தூண்கள்.

கல்வியறிவில் கேரள மாநிலத்தை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பதால் மக்கள் விழித்துக்கொண்டுள்ளனர். ரங்கராஜ் பாண்டேவிற்கு தமிழ்நாட்டின் அர்னாப் கோஸ்வாமி என பெயர் வைத்ததில் இருந்தே மக்கள் எந்த அளவில் விழிப்புடன் இருக்கிறார்கள்? எப்படி பகுத்தறிகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் செய்யும் விச்சித்திரமான அரசியலில் நாங்கள் எப்போதுமே விச்சித்திரமான அரசியல்வாதிகள்தான் அண்ணாதுரை கூறினார். தமிழ்நாட்டினுடைய கொள்கைகள், தமிழர்களுடைய பார்வைகள் எப்போதுமே மற்ற மாநில மக்களை விட விச்சித்திரமானது, முற்போக்கானது. இத்தகைய காரணங்களால்தான் தமிழ்நாட்டில் மதவாத அரசியல் எப்போது நுழைந்தாலும் சக்தி இழக்கும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்