ஏன் தமிழ்ப் பெண்களை திருமணம் செய்ய வேண்டும்? 7 காரணங்கள்!

0
3100

தமிழ்ப் பெண்கள் என்றாலே அழகுதான். நிறம் எதுவாகினும் நம் பெண்களின் குணம் வேறு எந்த இன பெண்களுக்கும் கிடைக்காத வரம். இங்கே ‘ஏன் தமிழ்ப் பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும்?’ என்பதற்கான ஏழு காரணங்களை பார்ப்போம்.

1. கலாச்சாரம்:
பொதுவாகவே நமது வீடுகளில் பெண்களை கலாச்சாரம், பண்பாடு என்றுதான் சொல்லி வளர்ப்பார்கள். சிறு வயதில் இருந்து பருவம் வரும் வரை மட்டுமல்ல இறுதி வரை கலாச்சாரம் சார்ந்த சடங்குகளை தாண்டியே ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் பயணிக்கிறார்.

2. சேலை:
சேலைக்கும் தமிழ்ப் பெண்களுக்குமான உறவு தொப்புள்கொடி உறவு. சங்க காலத்தில் இருந்து இன்று வரையிலும் நம்முடன் பயணிக்கும் கலாச்சார கருவி சேலை என்றால் மிகையாகாது. தமிழ்ப் பெண்கள் காஞ்சிப்பட்டு உடுத்துகிறார்கள் என்பதாலேயே வெளி மாநிலத்தினர் நமது தமிழ்ப் பெண்களை திருமணம் செய்ய விரும்புகின்றனர்.

3. உடை நேர்த்தி:
தமிழ்ப் பெண்களிடம் பிடித்த ஒரு விடயம் உடை நேர்த்திதான். சேலை உடுத்தும்போது லோ ஹிப் வைக்காமல், நேர்த்தியாக இடை மறைக்க உடுத்திக்கொள்ளும் பண்பாடு வேறு எந்த மாநில பெண்களிடமும் பார்க்க முடியாது. சுடிதார், குர்தா, ஜீன்ஸ் என பல மாடல் உடைகள் வந்தபோதிலும் அங்கே நமது பெண்கள் நேர்த்தியை கடைபிடித்தனர். லெகிங்ஸ் கலாச்சாரத்தை இப்போது பெண்கள் வெளித்தள்ள விரும்புகின்றனர்.

4. அலங்காரம்:
திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாலும், திருமணமான ஒவ்வொரு பெண்ணும் கண்ணுக்கு மை இடுவது, உதட்டுச்சாயம், திலகம் இட்டுக்கொள்வது போன்ற அலங்காரங்களை கடைபிடிக்கின்றனர். இதையும் கூட பாரம்பரியத்தின் அடிப்படையிலேயே செய்கின்றனர். யாருடைய உந்துதலும் அங்கில்லை.