வாட்ஸ்அப் ‘அட்மின்’களுக்கு ஓர் நற்செய்தி! #WhatsApp

0
233
        வாட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் செய்தி பகிர்வதில் கட்டுப்பாடு
வாட்ஸ்அப் 'அட்மின்'களுக்கு ஓர் நற்செய்தி!  #WhatsApp
ஃபேஸ்புக்கின் மற்றொரு அங்கமான வாட்ஸ்அப், தங்களுடைய பயனாளர்கள் பயன் பெறும் வகையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது. அதாவது, வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள் தங்கள் குழுவில், பிற வாட்ஸ்அப் உறுப்பினர்கள் புகைப்படங்கள், செய்திகள் பகிர்வதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது.
Restricted Group‘ என்ற இந்த மாற்றத்தின் மூலம் வாட்ஸ்அப் குழுவின் தலைவராக செயல்படுபவர், தங்கள் குழுவில் யார் செய்தி பகிரவேண்டும், என்ன மாதிரியான செய்தி பகிர வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். இந்த வசதி மூலம் உங்களது குழுவில் வாலாட்டும் உறுப்பினர்களின் வாலை இனி ஒட்ட நறுக்கிட முடியும் என்பது நற்செய்தி.
சமீபத்தில் தான் வாட்ஸ்அப், நாம் ஒருவருக்கு தவறாக செய்தி அனுப்பியிருந்தால்,  அதை அவர் பார்க்கும் முன் டெலிட் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்