ராணுவ வீராங்கனைகளுடன் கமல்ஹாசன்.. ‘விஸ்வரூபம் 2’ அப்டேட்!

0
100

2013 ஆம் ஆண்டு கமல் இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் பல தடைகளுக்கு பிறகு வெளியானது. படம் எடுக்கும்போதே இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருந்தார். பல பிரச்சனைகளை சந்தித்து முதல் பாகம் வெளியானது. அப்பொழுதே இரண்டாம் பாகத்தின் படபிடிப்புகள் பாதி நிறைவந்தது. விரைவில் வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியாகி இருந்த நிலையில் பாதியிலே நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

ராணுவ வீராங்கனைகளுடன் கமல்ஹாசன்.. 'விஸ்வரூபம் 2' அப்டேட்!

தற்போது தொடங்கியுள்ள ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதிகட்டப் படபிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. அதனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். பெண் ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் நாட்டின் ஒரே பயிற்சி மையமான சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தால் நானும் இந்த நாடும் பெருமையடைகிறோம். பெண்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன், குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த எனது பாரதத் தாய்க்கு. மா துஜே சலாம்’ என்று கமல் பதிவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு  ‘விஸ்வரூபம் 2’ வெளியாகும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்