விஜயின் அடுத்த படத்தின் ஹிரோயினி யார் தெரியுமா?

0
312

திபாவளி அன்று பல பிரச்சனைகளை கடந்து வெளியானது ‘மெர்சல்’ திரைப்படம் வெளியானது. படம் திரைக்கு வந்த பின்பும் பா.ஜ.க மூலம் எதிர்ப்புகள் வந்தன. இருப்பினும் படம் வசூல் சாதனை படைத்தது. படம் வெற்றி பெற்றதற்கு பா.ஜ.க முக்கிய காரணம் என்று எல்லாம் தெரிவித்து வந்தனர். பலரும் இப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இப்படத்திற்கு பிறகு விஜயின் 62 வது படத்தை யார் இயக்க போகிறார் என்ற நிலையில் இருந்த ரசிகர்களுக்கு, அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தனது அடுத்த படத்தில் நடிக்கப் போவதாக தெரிவித்தார். இதன் ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நடிகர்கள் தேர்வு தற்போது நடந்துவருகிறது. இதில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் விரைவில் ஸ்கிரீன்டெஸ்ட் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை நயன்தாராவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அறம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தனது அசாத்திய நடிப்பால் நடிகை நயன்தாரா மக்களின் மனதை வெகுவாக கவர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்