வைரலான “தளபதி 62” போட்டோ…!

0
264

நடிகர் விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார் அதற்கான போட்டோஷூட் நடைப் பெற்றது. அதுவும் ரகசியமாக வெளியாகி படக்குழுவினர்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தளபதி 62 படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் துவங்கியிருக்கிறது. விஜய் கலந்துகொண்ட பூஜை புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்கள் வெற்றிப்பெற்றதால் மீண்டும் இணைந்துள்ளனர். விஜயின் 62ல் நடிகை கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். சன் பிச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

வைரலான “தளபதி 62” போட்டோ...!வைரலான “தளபதி 62” போட்டோ...!

‘விஜய் 62’ படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விஜய் 62’ படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கி இருக்கிறது. நடிகர் விஜய் கிளாப் போர்டு அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்தார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

உங்க கருத்தை தெரிவிக்கலாம்