நடிகன்னா ஓட்டு போடனுமா? கமலை சீண்டிய வெங்கட் பிரபு!

0
220

நடிகர் கமல் அரசியலில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அவரை சீண்டிப் பார்கிறார். கமல் கடந்த சில மாதமாகவே சமூக கருத்தை முன் வைத்தும் அரசியல் சூழல் குறித்தும் பேட்டியும் தனது ட்விட்டர் பக்கத்திலுமு் கருதை்தை பதிவிட்டுள்ளார். தனது பிறந்த நாள் அன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது ‘ஆர்.கே.நகர்’ படத்தின் டீஸர் வெளியிட்டுள்ளார். அதில் ஆர்.கே.நகரில் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக டீசரில் நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுடுவாங்களா? நீ என்ன எம்.ஜி.ஆரா? என்று வரும் வசனங்கள் கமலை குறிப்பதாக கூறியுள்ளார் ‘கயல்’ பட நடிகர் சந்திரன். தனது ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபுவிடம் வாக்குவாதத்தில் இறங்கினார். “உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்த அவர், கமல்ஹாசனுக்கு வெங்கட் பிரபு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதையும் விமர்சித்துள்ளார். “ஒரு பக்கம் ‘ஆர்.கே.நகர்’ டீஸர், அதை சரிக்கட்ட பிறந்தநாள் வாழ்த்தா?” என சந்திரன் கேட்டுள்ளார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்