இன்னும் நிறைய அதிர்ச்சிகள் காத்திருக்காம்… சொல்கிறார் வெற்றிவேல்!

0
475

இன்று காலையில் எம்.எல்.ஏ வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ  வெளியிட்டார். 20 நொடி வீடியோவில் ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றதை சசிகலா வீடியோ எடுத்ததாக வெற்றிவேல் கூறியுள்ளார்.

ஐசியுவில் இருந்து ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பிறகு வீடியோ எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவை அவதூறாக பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணி மீது வெற்றிவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தார் என்று பன்னீர் செல்வம், அமைச்சர்கள் அனைவருக்கும் தெரியும் கூறிய வெற்றிவேல், ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக பேசும் யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.

இந்த வீடியோ மட்டுமல்லாமல் இன்னும் நிறைய வீடியோ ஆதாரங்கள் உள்ளன. தேவைபட்டால் வீடியோவை வெளியிடுவோம். ஆர்.கே.நகர் தேர்தலுக்கும் வீடியோ வெளியிட்டதற்கும் தொடர்பு இல்லை என்று. விசாரணை கமிஷனர் ஆறுமுகச்சாமி கேட்டால் கண்டிப்பாக தருவோம் என்று வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்