உ.பி.யில் 6 ரயில்பெட்டிகள் தடம்புரண்டு விபத்து… 5 பேர் பலி

0
214

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டதில் 5 பயணிகள் பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பூரி-ஹரித்வார்-கலிங்கா இடையே இயங்கும் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில், மாலை 05.50 மணியளவில் உத்திரப்பிரதேசத்தின் முசாபர்நகர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அதன் 6 பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திகுச் சென்று பயணிகளை அவசர அவசரமாக மீட்டுள்ளனர். அதில் 6 பயணிகள் மட்டும் பலியாகியிருக்க, மீதமுள்ள பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கும் சிறுவகை மற்றும் பெரும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

காயமடைந்த பயணிகளுக்கு அங்கேயே முதலுதவி செய்யப்பட்டு, பிறகு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மொத்தம் 34 பேர் உடலில் படுகாயம் அடைந்தவர்கள் என்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

மேல்மட்ட அதிகாரிகளை சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் அனுப்பியுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார். தவிர அவரே நேரடியாகவும் கண்காணித்து வருகிறார். உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.