கும்பத்துடன் போராட்ட களத்தில் குதிக்கும் போக்குவரத்து ஊழியர்கள்!

0
73

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நடத்திவரும் வேலைநிறுத்தம் போராட்டம் 6 வது நாளாக நடைப்பேற்று வருகிறது. ஊரிய உயர்வு, ஓய்வூதிய நிலுவை தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் தற்காலிக ஊழியர்களை வைத்து குறைந்து அளவிளான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தோல்வியே சந்தித்தது. போராட்டம் நடத்தி வரும் போக்குவரத்து ஊழியர்களின் உடனடியாக மீண்டும் பணிக்கு திரும்பவேண்டும் என உயர்நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் ஊழியர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என்று தெரிவித்து விட்டனர்.

இந்நிலையில் தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவெடுத்துள்ள ஊழியர் சங்கங்கள், தமிழகம் முழுவதும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் இன்று போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பத்தினரும் சாலையில் இறங்கி போராடவுள்ளதால் இந்த போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்