இந்தியாவின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் 2 தமிழர்கள்!

0
1862

உலகின் முன்னணி வர்த்தகப் பத்திரிக்கை நிறுவனம் போர்ப்ஸ் ஒவ்வொரு வருடமும் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்புகளை ஆய்வு செய்து தலைசிறந்த 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிடும். இந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற ஆசையும் அனைத்து முன்னணி தொழிலதிபர்களிடமும் இருக்கும். இதில் முதல் 30 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் இடம் பிடித்துள்ளனர்.

1. முதல் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி தான். இவரின் சொத்து மதிப்பு 38 பில்லியன். பெட்ரோல்கெமிக்கல்ஸ் ஆயில் கேஸ் மற்றும் டெலிகாம் துறைகளில் கால்பதித்து சாம்பாதித்து வருகிறார்.

2. 72 வயதாகும் அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 19 பில்லியன். மென்பொருள் துறையில் இருககும் இவர் தான் 2 வது இடம்.

3. பல துறைகளில் கால்பதித்து இருக்கும் ஹிந்துஜா குடும்பத்தின் சொத்து மதிப்பு 18.4 பில்லியன் டாலர் கொண்ட இவர் 3வது இடத்தில் உள்ளார்.

4. ஸ்டீல் துறையில் சம்பாதிக்கும் லட்சுமி மிட்டல் 4 வது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 16.5 பில்லியன் டாலர்.

5. 16 பில்லியன் டாலர் சொத்துக்கள் கொண்ட பலோஜி மிஸ்திரி 5வது இடம் பிடித்துள்ளார். இவர் கட்டுமான துறையில் மட்டுமே இவர் இவ்வளவு சம்பாதித்துள்ளார்.

6. காட்ரிஜ் குடும்பம் 14.2 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 6 வது இடத்தில் உள்ளது. இவர்கள் நுகர்வோர் துறையில் இலாபம் பார்க்கின்றனர்.

7. மென் பொருள் துறையில் கால்பதித்த ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு 13.6 பில்லியன் டாலர். இவர் 7 வது இடத்தில் உள்ளார்.

8. குமார் பிர்லா கமாடிட்டி மூலம் 12.6 பில்லயன் சொத்துகளடன் 8 வது இடத்தில் உள்ளார்.

9. பார்மா துறையில் கால்பதித்து 9வது இடத்தில் திலீப் சங்வி. இவரின் செத்து மதிப்பு 12.1 பில்லியன் டாலர்.

10. இன்பரா மற்றும் கமாடிட்டி துறையில் இருக்கும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 11 பில்லியன் டாலர். இவர் 10 வது இடத்தில் உள்ளார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்