பிரம்மச்சாரி தின ஆஃப்பர்… 3 நிமிடங்களில் 10,000 கோடி பொருள் விற்று சாதனை!

0
163

அதிக மக்கள் தொகை கொண்ட நாடும் சீனா தான். அவர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் தனது சந்தையை நிலை நாட்டிவருகிறது. அதுமட்டுமில்லால் தனது வர்த்தகத்தை உலகமெங்கும் நிறுவி வருகிறது. புதிய புதியதாய் தினம் கொண்டாடி வருகிறோம். அந்த தினத்திற்கு பல்வேறு நிறுவனங்கள் தங்களில் விற்பனை அதிகரிக்க பல்வேறு சிறப்பு சவுகைகள் அறிவிக்கும். அதோ போல் சீனாவில் பிரம்மச்சாரிகளுக்கென்று ஒரு தினம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. சீனாவில் 1990 முதல் பிரம்மச்சாரி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கான நவம்பர் 11-ம் தேதி பிரம்மச்சாரி தினம் கடைப்பிடித்து வருகின்றனர். இம்மாததில் நான்கு ஒன்று குச்சிப்போல் உள்ளதால் அன்று இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. சீனாவின் பிரபல அலிபாபா ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் பிரம்மச்சாரி தினத்திற்காக சிறப்பு சலுகைகள் அறித்தது. விற்பனை தொடங்கி 3 நிமிடத்தில் 10,000 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்றுவிட்டன. இதே போல் சென்ற ஆண்டு 6 நிமிடம் 58 வினாடிகளில் 10,000 கோடியிலான பொருட்கள் விற்று விட்டன.  முந்தைய சாதனையை இந்தாண்டு அந்நிறுவனம் தற்போது முறியடித்துவிட்டது.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்