கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய டாப்சி!

0
405

தமிழ் சினிமாவில் தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடித்தவர் டாப்சி. முதல் படத்திலே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தால் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற மொழிகளின் படங்களிலும் நடித்து தனது ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார். மாடலாகவும் வலம் வந்து கொண்டியிருப்பவர் டாப்சி. சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆடைகள் குறைவாக ஆணிந்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த டாப்சியின் ரசிகர்களுக்கு கடும் அதிச்சியாகவே இருந்தது. அதுமட்டுமில்லாமல் அவரை விமர்சித்து வருகின்றனர். இப்படி ஆடை அணிவதால் தான் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். என்று ஒருவர் விமர்சிக்க அதற்கு டாப்சி அப்படி என்றால் முதலில் அவர்கள் அந்த கேவலமான புத்தியை மாற்றவேண்டும், ஆடையை அல்ல என்றும் கூறியுள்ளார். மற்றோரு நபர் இப்படி பணத்திற்காக நடிப்பது தான் கலாச்சார சீரழிவு ஏற்படுத்தும் என்று அதற்கு உங்களை போன்ற கலாச்சார காவலர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம் என விமர்சித்துள்ளார்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்