‘பிக்பாஸ்’ ஓவியாவுக்காக பிரச்சாரம் செய்தவருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்!

0
138

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா தமிழர்களின் உள்ளங்களை கொள்ளையடித்து விட்டார் என்பது அனைவருக்கும் அறிந்ததே. பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களில் தலைவி ஒவியாவுக்கு தான் ரசிகர் பட்டாளம் அதிகம். உண்மையாக இருக்கம் தலைவி சிறு பிள்ளை தனமாக செய்யும் குறும்பு என ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அதன் பின் பாதியிலே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன் பின் விளம்பர படங்கள் மற்றும் லாரன்ஸ் உடன் கஞ்சனா படத்தில் கமிட்டாகி இருக்கும் ஓவியா அவ்வபொழுது டப்மேஷ் செய்து புகைப்படத்தை வெளியிடுகிறார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ஓவியாவுக்கு ஓட்டு போட சொல்லி பில்லுடன் அச்சிடத்து கொடுத்துள்ளார் ஸ்விட் கடை உரிமையாளர். அதை தற்போது பார்த்துள்ளார் ஓவியா. உடனே கார் எடுத்துக்கொண்டு, அந்த ஸ்வீட் கடைக்குச் சென்று, கடை உரிமையாளருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். தனக்கு ஓட்டு போட சொன்னதற்கு நன்றியை தெரிவித்தார். அந்த புகைப்படம் தற்போது வேகமாக வைரலாகிக் கொண்டியிருக்கிறது. தலைவி எப்பவுமே ரசிகர்களை மகிழ்விப்பதில் சிறந்தவர் என்று மேலம் நிருபித்துள்ளார்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்