திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை… சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!

0
86

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேசிய கீதம் காட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் நாடு முழுவதும் திரையரங்குகளில் படம் ஆரம்பிக்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசிய கீதம் இசைக்கபடும் போது சிலர் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவு இடப்பட்டது. இதில் மாற்று திறனாலிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. தேசிய கீதம் இசைக்கும் போது சிலர் நிற்பதில்லை அதனால் அவர்களை தாக்கவாதாக புகார்களும் எழுந்தன. இந்நிலையில் மத்திய அரசு புதிய மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் அமைச்சரவை குழுவை அமைத்து வழிமுறைகளை உருவாக்க எப்படியும் 6 மாதங்களாகும் என்பதால் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு கூறுகையில் 1971-ஆம் ஆண்டு தேசிய கொடி, சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு வழிமுறைகளை வகுக்கும் வரை தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது நீதிபதி கூறுகையில், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என்றும் தேசிய கீதத்தை எங்கெல்லாம் ஒளிபரப்பலாம் என்பதை மத்திய அரசு வரையறுக்க வேண்டும்.