தல அஜித்துடன் ஜோடி சேரும் ஹீரோயின் யார்..!

0
613

தல அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் டைட்டில் அறிவித்தும் அவருடன் ஜோடி சேரும் நடிகை என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உருவாகியுள்ளது. இன்னும் ரகசியாமாக வைத்திருக்கும் இயக்குனர் சிவா, சில நடிகைகளை சந்தித்து வருகிறார் என்பது மட்டும் செய்திகள் வெளிவருகின்றன. விசுவாசம் படத்தில் அஜீத் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார், ஆத்மிகா நடிப்பார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பார் என்று அவ்வப்போது பேச்சு கிளம்பிக் கொண்டிருக்கிறது.

தல அஜித்துடன் ஜோடி சேரும் ஹீரோயின் யார்..!

தற்போது விக்ரம் வேதா படத்தில் மாதவன் ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாதவனுக்கு ஏற்ற ஜோடியாக இருந்தார் ஷ்ரத்தா. தலக்கும் பொருத்தமாக இருப்பார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருன்றனர்.

அஜீத், இயக்குனர் சிவா நான்காவது முறையாக ஒன்று சேர்ந்துள்ள படம் விசுவாசம். படப்பிடிப்பு வரும் 22ம் தேதி துவங்க உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து சிவா இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்