ஜெ.,வுக்கும் சசிக்கும் சண்டை நடந்தது… உண்மையை உடைத்தார் கார் டிரைவர்!

0
166529
ஜெ.,வுக்கும் சசிக்கும் சண்டை நடந்தது... உண்மையை உடைத்தார் கார் டிரைவர்!

ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், கார் டிரைவரான ஈஸ்வரன் என்பவர் சமீபத்தில் பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

“லண்டன் செல்வம் என்பவர் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் கார்களை பராமரித்துக் கொண்டிருந்தவர். அவர் எப்போது வேண்டுமானாலும் வேதா இல்ல வளாகத்திற்குள் சென்று வருவார். சிலமுறைகள் நானும் அவருடன் உள்ளே சென்றிருக்கிறேன்.

லண்டன் செல்வம் அடிக்கடி உள்ளே நடக்கும் சில சம்பவங்களை என்னிடம் ரகசியமாக பகிர்ந்து கொள்வார். ஒருமுறை ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒரு வழக்கிற்காக கடுமையாக வாய்ச்சண்டை போட்டுக்கொண்டதை என்னிடம் செல்வம் தெரிவித்தார்.

ஜெயலலிதாவை பார்த்துக்கொள்ள வேதா இல்லத்திலேயே பன்னிரண்டு பேர் கொண்ட மருத்துவக்குழு எப்போதும் தயாராக இருக்கும். அவர் மயங்கி விழுந்தபோது அந்த மருத்துவக்குழு என்ன ஆனது? என்பதும், அம்மாவின் உடல்நிலை அவ்வளவு மோசமானது எப்படி என்பதும் யாருக்கும் தெரியவில்லை.

எனக்கும் இது குறித்து எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து ஆராய்ந்து பேசினேன் என்றால் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்படும்” என பதறியடித்து பேட்டி தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தை விதித்த மருந்து இதுதான்… வெளியானது உண்மை!!

SHARE