சூர்யா படத்திற்கு புகார் கொடுத்த அ.தி.மு.க நிர்வாகிக்கு பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

0
370
சூர்யா படத்திற்கு புகார் கொடுத்த அ.தி.மு.க நிர்காகிக்கு பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடிப்பில் உருவாகியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ரசிர்கர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ள இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க பிரதிநிதி சதிஷ்குமார் படத்திற்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். சொடக்கு பாடலில் வரும் வரும் “அதிகார திமிர பணக்கார பவர வெளுக்க தோணுது” என்ற வரி அதிமுக-வை குறிப்பதாக உள்ளது என்று காவல் நிலையத்தில் சதிஷ் புகார் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, படத்தை தாண்டி நாட்டில் நிறைய பிரச்சனை இருக்கிறது. தற்போது பஸ் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அவர்களுக்கு போய் முதலில் உதவுங்கள் என பதிவு செய்துள்ளார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்