நடிகர் ரஜினியின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடி தான்!

0
4298
நடிகர் ரஜினியின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடி தான்!

நடிகர் ரஜினி டிசம்பர் 31 ஆம் தேதி தனது அரசியலில் பிரவேசத்தை ஆரம்பித்தார். தனிகட்சி ஆரம்பித்து 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார். அவரின் இந்த அறிக்கைக்கு பல அரசியல் தலைவரும் வாழ்த்து தெரிவித்துனர். ரஜினியின் இந்த அறிவிப்புக்கு ரசிகர் பலரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடினார்கள். இருப்பினும் அவர் தனது அரசியல் பிரவேசத்தை அடுத்து கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். அதற்காக ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளார். ரஜினிமன்றம் என்ற இணையதளத்தை உருவாக்கி அதில் ரசிகர்கள் மக்கள் கட்சி சார்பாக பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவதால் அவரின் சொத்து மதிப்பு பற்ற தெரிந்து கொள்வது அவசியமாகியுள்ள ஒரு சூழல் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தற்போதைய சொத்து மதிப்பு 360 கோடி ரூபாய் என்று ஃபின்ஆப் வெளியிட்டுள்ளது. சராசரியாகத் திரைப்படத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் 55 கோடி எனவும், முதலீடுகள் மூலமாக 110 கோடி ரூபாய், ஆடம்பர கார்கள் 3 க்கும் சேர்ந்து 2.5 கோடி ரூபாய், ஆண்டுக்கு வருமான வரி 13 கோடி என இவரது சொத்துக்கள் மதிப்பிடப்பட்டுள்ளது. ரஜினியின் சொத்து மதிப்பு என்பது திரைப்படத்தில் இருந்து வரும் ஊதியம், வீடு மற்றும் தனிப்பட்ட முதலீடுகள் போன்றவற்றினை வைத்துக் கணக்கிடப்பட்டதாக ஃபின்ஆப் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்றாலும் இந்தியா மட்டும் இல்லாமல் உலகளவில் பிரபலமான நடிகராக உள்ளார்

 

உங்க கருத்தை தெரிவிக்கலாம்