சாலைகளில் அறுந்து விழும் மின்கம்பிகள்…. ஜாக்கிரதை…

0
165

சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. சில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின்கம்பிகள் சாலைகளில் அறுந்து விழுந்துள்ளன. இதனால் பெரும் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. சிதைந்த மின்கம்பிகளை பாதுகாப்பாக அகற்றும் பணிகளில் மின்வாரியம் மும்மரமாக ஈடுபட்டுள்ளது. உங்கள் பகுதியில் மின்கம்பிகள் அறுந்திருந்தாலோ, மின்பெட்டிகளில் இருந்து மின்கசிவு ஏற்பட்டிருந்தாலோ உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.

  • புகார்கள் தெரிவிக்க 044 – 28521057, 28521300, 28521378, 28521088 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
  • வட சென்னை மக்கள் 044 – 28521949, 28224423 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
  • தென் சென்னை மக்கள் 044 – 28594234, 24715121 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்