‘க்யூட் பொண்ணு’ ப்ரியாவை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

0
957

கடந்தாண்டு ஜிமிக்கி கம்மல் ஷெரில். இந்தாண்டு மலையாள திரையுலகத்தில் வைரலாக வலம் வந்துகொண்டிருக்கும் அழகான பெண்குட்டி நம்ம க்யூட் ஸ்கூல் கேர்ள் ப்ரியா ப்ரகாஷ் வாரியர்.

திடீரென ஃபேஸ்புக்கில் இந்த க்யூட்டியின் குட்டி வீடியோ உலா வரத் தொடங்கியது. உற்சாகமான உடல்மொழி. அழகான நடிப்பால் சேட்டன் மனசுகளை கட்டிப்போட்டுவிட்டு, இப்போது தமிழ்நாட்டு பக்கம் வந்திருக்கிறார். வீடியோவில்.

இந்த வீடியோ பாடல், ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெறும் பாடல். பள்ளி மாணவியாக நடித்திருக்கிறார் ப்ரியா ப்ரகாஷ். இது ஹை-ஸ்கூல் காதல் கதை.

வினீத் ஸ்ரீனிவாசனின் மென்மையான குரலில் “மணிக்ய மலராய பூவி….” பாடல் இசைப் பிரியர்களின் இதயத்தை கரைக்கும். இப்பாடலின் காட்சிகளில் ப்ரியா தனது அழகான நடிப்பால் ரசிகர்களின் மனதை கரைக்கிறார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்