இந்த பொங்கலுக்கு தொலைக்காட்சியில் கபாலி, மெர்சல், அறம் மற்றும் பல புதுப்படங்கள்!

0
265

இந்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் ஏராளமான புதுப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. வெள்ளித்திரையில் இந்தாண்டு ஒரு சில படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக உள்ள நிலையில், சின்னத்திரையில் பிளாக்பஸ்டர் ஒளிபரபப்பாகின்றன.

உலகத் தொலைக்காட்சியான சன் டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி‘, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘அறம்‘ மற்றும் இளைய தளபதி நடித்த ‘பைரவா‘ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்‘ ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இளையதளபதி விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ‘மெர்சல்‘ பொங்கல் சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பப்படுகிறது.

ஜெயா டிவியில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ‘, தனுஷ் நடித்த ‘தொடரி‘ ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன.

விஜய் டிவியில் வழக்கம்போல தேஞ்ச கேசட்தான். ‘எம்.எஸ். டோனி‘ மற்றும் ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘கடவுள் இருக்கான் குமாரு‘ ஆகிய படங்களே மீண்டும் ஒளிபரப்பாகின்றன.