ரஜினிக்கு பீட்டா அமைப்பில் இருந்து கடிதம்!

0
200

ரஜினி ரசிகர்கள் சந்திப்பிற்கு பிறகு தனது அரசியல் அறிவிப்பை தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பீட்டா அமைப்பும் ரஜினிக்கு கடிதம் எழுதி இருக்கிறது. இந்த கடிதத்தை கடிதம் என்று குறிப்பிட்டு பீட்டா அனுப்பி இருக்கிறது.

இதில் ரஜினியை பீட்டா வாழ்த்தி இருக்கிறது. உங்களுடைய அரசியல் அறிவிப்பிற்கு வாழ்த்துக்கள். சினிமாவின் வெற்றியை தொடர்ந்து நீங்கள் அரசியலுக்கு வந்து இருப்பதற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு இருக்கும் புகழும் பலமும் மக்களுக்கு நல்ல பலனை அளிக்கும் என்று நம்புகிறோம்.

ரஜினி ரசிகர்கள் வரும் 7ம் தேதி அழகர்கோவிலில் ரஜினி அரசியல் அறிவிப்பை விழாவாக கொண்டாட இருக்கிறார்கள். இதில் ஆடு வெட்டி சாப்பாடு சமைக்கப்பட இருக்கிறது. இந்த விழாவில் ஆடு வெட்டி கொண்டாட கூடாது என பீட்டா கோரிக்கை வைத்து இருக்கிறது. இதை அவசர விஷயம் என்றும் பீட்டா குறிப்பிட்டு உள்ளது.

கோவிலில் ஆடு வெட்டி கொண்டாடுவது சட்டத்திற்கு விரோதமானது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டு இருக்கிறது. 2001ல் அரசு வெளியிட்ட ஆணையின்படி இது முழுக்க முழுக்க சட்டத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளது. எனவே இதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை வைத்து இருக்கிறது.
பீட்டா அமைப்பின் கடிதம் தற்போது சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளன.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்