காதலிக்க மறுத்ததால் பெட்ரோலை ஊற்றி எரித்த வாலிபர்!

0
164

ஒருதலை காதலால் மூன்று பெண்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இன்றைய இளைஞர்கள் பெண்களின் மீது தனது காதலை ஏற்காமல் போனால் உடனே அவள் மீது ஆசிட் வீசுவது அல்லது கத்தி குத்துவது என தங்களின் கோபத்தை தீர்த்துக் கொள்கின்றனர். இதனால் இருவரின் குடும்பமும் கடும் துன்பத்தை சந்திக்கின்றார்கள். தான் காதலித்த பெண்ணை எப்படியாவது மணக்க வேண்டும் அல்லது அவளை கொல்ல வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆதம்பாக்கத்தில் வசித்து வரும் இந்துஜாவும், ஆகாஷ் என்பவரும் பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள். பட்டப்படிப்பு படித்து முடித்துள்ள இந்துஜாவை ஆகாஷ் காதலிப்பதாக கூறியுள்ளார். ஆகாஷ் காதலை ஏற்க இந்துஜா மறுத்து விட்டார். விரக்தியில் இருந்த ஆகாஷ் நேற்றிரவு இந்துஜா வீட்டிற்கு வந்து சண்டை போட்டுள்ளார். அப்போது இந்துஜாவின் தாயார் ரேணுகா, சகோதரி நிவேதிதாவும் வாக்குவாதம் செய்தனர். கையில் பெட்ரோல் கேனுடன் வந்த ஆகாஷ், நின்று கொண்டிருந்த இந்துஜா, அவரது தயார், சகோதரி ஆகிய மூன்று பேர் மீது ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் இந்துஜா சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இந்துஜாவின் தாயார், சகோதரி ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தலைமறைவான ஆகாஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.