ஓகி புயல்… அவசர எண்கள் அறிவிப்பு!

0
144

கன்னியாகுமரி மாவட்டத்தை ஓகி புயல் சின்னாபின்னமாக்கி இருக்கும் நிலையில் அம்மாவட்ட மக்களுக்காக ஆபத்து கால அவசர எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரி-நாகர்கோவில் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்தும் அங்கே பாதிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மழை வெள்ளம் புகுந்துள்ளது. சுசீந்திரம் கோவிலுக்குள்ளும் வெள்ளம் நிற்கிறது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மக்களுக்காக அவசர உதவி எண்களை அறிவித்திருக்கிறது.

பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் 1௦77, 04652231077, 9442480028 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்