தமிழில் நடிக்கும் நிவின்பாலி படம் ‘ரிச்சி’ ரீலிஸ் தேதி அறிவிப்பு!

0
229

தமிழில் ‘நேரம்’ படத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து நேரடியாக தமிழில் நடிக்கும் நிவின்பாலி, அவரது படம் தற்போது வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் நிவின்பாலி. இவரின் அனைத்து படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தமிழில் ‘நேரம்’ படமும் இவருக்கு சிறந்ததாகவே இருந்தது. அதன் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடித்துள்ளார் நிவின்பாலி. ரீச்சி படத்தை மிஷ்கினின் உதவி இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்குகிறார். அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய ‘லக்ஷமி’ என்ற குறும்படத்தில் நடித்த லக்ஷமி ப்ரியா இப்படத்தில் நடித்துள்ளார். ‘சதுரங்க வேட்டை’ நடராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ரவுடியாக நிவின்பாலி நடித்துள்ளார். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது அதன் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி ரிச்சி படம் திரைக்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்