பிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்து வரப்போகும் பிரபல நடிகை யார்?

0
516

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரபல நடிகை ஒருவர் கலந்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனாலும் ஓவியா இல்லாத காரணத்தால் டி.ஆர்.பி.யை ஏற்ற முடியாமல் பிக்பாஸ் குழுவினர் ஆழ்ந்த கவலையில் உள்ளனர். ஓவியா இருந்த வரை பார்வையாளர்களுக்கும், டி.ஆர்.பி.க்கும் சற்றும் பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருந்த இந்நிகழ்ச்சி இப்போது ஈ ஓட்டுகிறதாம். இதனால்தான் தொகுப்பாளர் கமலஹாசனே நேரடியாக ஓவியாவின் வீட்டிற்குச் சென்று அவரை அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய பிரபலம் ஒருவர் வர இருப்பதாகவும், அவர் பிரபல நடிகை என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த நந்தித்தா ஸ்வேதா வரும் 15ம் தேதி பிக்பாஸ் வீட்டிற்குள் வரலாம் என்றும் அல்லது கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியலில் நடிக்கும் ப்ரியா பவானிசங்கர் வருவார் என்றும் கூறப்படுகிறது.

இருவருமே வந்தாலும் கூட ஓவியாவுக்கு கிடைத்த வரவேற்பை பெற முடியாது என்பதுதான் ஓவியா ஆர்மி காரர்களின் கருத்தாக இருக்கிறது.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்