நயன்தாரா அரசியலுக்கு வருவார் என்பதை உறுதி செய்யும் 4 அறிகுறிகள்!

0
1404

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு ஆங்கங்கே அடிபடுகிறது. இதை பற்றி கோடம்பாக்கமும் கூட கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறது. ரஜினி – கமல் அரசியல் டாப்பிக் போய்க்கொண்டிருக்கும் இந்த வேளையில் நயனும் உள்ளே நுழைவார் என அடித்துக் கூறுகிறார்கள் விஷயம் தெரிந்த சிலர். தற்போது அவர் சினிமாவிற்காக மெனக்கெட்டாலும், அதில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு நிச்சயமாக தமிழ்நாட்டு அரசியலுக்குள் அடி எடுத்து வைப்பார். அதை ஊர்ஜிதப்படுத்தும் நான்கு அறிகுறிகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம்.

கதாபாத்திரங்கள்:
எந்த படத்திலும் தனது எதிர்கால லட்சியங்களுக்கு ஏற்ப வலிமையான கதாபத்திரங்களையும், கதைகளையும் தேர்வு செய்கிறார். இதன் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடிக்க முடியும்.

 

 

 

லைம்லைட்:
ரஜினி, கமல்ஹாசனை போலவே நயனும் இப்போது அடிக்கடி லைம்லைட்டில் இருக்கிறார். அடிக்கடி வெளியாகும் புகைப்படங்கள், அவரைப் பற்றிய செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அடிக்கடி ஊடகங்கள் நயன்தாராவின் பெயரை உச்சரிக்கின்றன.

 

அரசியல், பெண்ணியம்:
காதல் வாழ்க்கை முதலில் கசந்து இப்போது இனித்தாலும் நயன்தாரா பெண்ணியம் பேசும் கதாபாத்திரங்களை ஏற்பது தொடங்கியிருக்கிறது. அரசியலுக்கும் ‘அறம்’ படத்தின் மூலம் பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.

 

 

குறியீடுகள்:
‘அறம்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’ என இனி வரப்போகும் நயன்தாரா படங்களின் டைட்டில்களில் நீங்கள் நிச்சயமாக ஏதேனும் ஒரு குறியீடுகளை பார்க்க நேரிடும். இந்த குறியீடுகள் எல்லாம் எதோ ஒரு செய்திகளை உங்களுக்குச் சொல்லும்.

 

த்ரிஷா இல்லைனா நயன்தாரா:
இந்த வாக்கியம் காமெடி வசனங்களாகவும், டைட்டிலாகவும் வந்துவிட்டது என்றாலும், இதுவே வாக்கிய பஞ்சாங்கம். பெண்கள் அணியில் இருந்து நயன்தாராவும், த்ரிஷாவும் அரசியலுக்கு வருவார்கள் என்பதுதான் இதன் உள்ளர்த்தம். கொடி படத்தில் த்ரிஷாவும் அரசியல் ஒர்க்-அவுட் செய்து பார்த்துவிட்டார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்