ஒரு வார்த்தை பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை ஜோதிகா!

0
853

பாலாவின் தயாரிப்பு இயக்கத்தில், ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் நாச்சியார். படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. நடிகர் சூர்யா இதனை யுட்யூபில் வெளியிட்டார். இதில் போலீஸ் அதிகாரியாகத் தோன்றுகிறார் ஜோதிகா. அதிரடி சண்டைக் காட்சிகளிலும் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில் படத்தின் டீசர் இன்று யுட்யூபில் வெளியானது. கிட்டத்தட்ட 1 நிமிடம் ஓடும் இந்த டீசர் ஒரு ஆக்ஷன் படம் என்பதைக் காட்டும் வகையில் உள்ளது. டீசரின் இறுதியில் ஜோதிகா ஒரு இளைஞனை அறைந்துவிட்டு ‘தே… பய’ என்று கோபத்துடன் திட்டுகிறார். இதை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலவின் படங்களில் இவைகள் சர்வ சாதரணம் என்றும் ஜோதிகா பேசியதில் எந்த தவறும் இல்லை என தங்கள் கருத்தை தெரிவித்து வதுருகின்றனர். பாலவின் படங்கள் எப்பொழுதுமே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உண்டு. இப்படத்தின் டீசர் வெளியானதிலிருந்து அந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாதா அளவிற்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிராகாஷ் மாறுபட்ட தோற்றத்தில் உள்ளார். ஜி.வி.பிராகாஷின் ரசிகர்களும் பாராட்டிவருகின்றனர். நிச்சயம் இப்படம் ரசிகர்ளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்