ப்ரியா வாரியருக்கு எதிராக இஸ்லாமிய இளைஞர் காவல் நிலையத்தில் புகார்…!

0
1358

ஒரு விடியோவால் ஒரு நாளில் இணைய புகழ் அடைந்துள்ள கேரள நடிகை ப்ரியா வாரியர். தனது புருவ அசைவினால் அனைவரையும் கட்டிப்போட்டவர். அவருடைய ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஒரே நாளில் பல லட்சம் ரசிகர்கள் ஃபலோயர்களா மாறி புதிய உச்சத்தை தொட்டார்.

இந்நிலையில் ஹைத்ராபாத் இஸ்லாமிய அமைப்பு ஒன்று ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்ய மலரய பூவி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர். அந்த பாடல் வரிகளில் புனித நபராம் மக்காவின் ராணியாக வாழ்வாள் என்ற வரி இடம்பெற்றுள்ளது. இந்த வரிகள் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும் இந்தப் பாடலில் நடித்த பிரியா வாரியர் மற்றும் பாடலை எழுதி, இசையமைத்து, பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இளைஞர்களின் மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்