‘தில்’ இருந்தா இந்த இடங்களுக்கு ஒரு முறை போயிட்டு வாங்க!!

0
531

உலகம் என்பது அற்புதமான கட்டமைப்புகளையும், ஏராளமான அதிசயங்களையும் கொண்டிருக்கும் கிரகம். அழகோவியம் மிகுந்த பல இயற்கை கட்டமைப்புகளும் இங்கேதான் இருக்கின்றன. அச்சத்தை தூண்டும் ஆபத்து நிறைந்த கட்டமைப்புகளும் இங்கேதான் இருக்கின்றன. அச்சத்தை உண்டாக்கும் சில இடங்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

 

வாடிகன் – ரகசிய கோப்புகள்: பிரமாண்டமான அரண்மனைகளாலும், உயர்ந்த மாட மாளிகைகளாலும், பல நூற்றாண்டுகளை கடந்த தேவாலயங்களாலும் சூழப்பட்டுள்ள நகரம் வாடிகன். இங்குள்ள பழைமை வாய்ந்த தேவாலயங்களில் மிக ரகசியமான பல முக்கிய கோப்புகளும், கடிதங்களும், அரசுடைமைகளும் வைக்கப்பட்டுள்ளன. இவை உள்ள தேவாலயங்களுக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அங்கே செல்வது மிக ஆபத்தான செயல் என்றே அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஐஸ்லேண்ட் – சுர்ட்சே:
ஐஸ்லேண்ட் டின் தெற்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள எரிமலையின் பெயர் சுர்ட்சே. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் உள்ள இந்த எரிமலைப் பகுதிக்கு பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் செல்ல அஞ்சுவர். விஞ்ஞானிகள் மட்டுமே அவ்வப்போது அங்கே ஆய்வுகளை நடத்துவதற்காக சென்று வருகின்றனர்.

ரஷ்யா – மெட்ரோ 2
ரஷ்யாவில் உள்ள மெட்ரோ 2 எனப்படும் ரகசிய ரயில் பாதை பழங்கால குகைகளுக்குள்ளும், பதுங்கு குழிகள் வழியாகவும் செல்கிறது. மாஸ்கோ நகரின் அதிகாரப்பூர்வ ரகசியப் பகுதியான இதற்கு கோட் நேம் டி-6 என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்டாலின் ஆட்சி காலத்தில் இப்பகுதி கட்டமைக்கப்பட்டது.

ப்ரேஸில் – பாம்புத்தீவு
பல்லாயிரக் கணக்கான வகைகளில் பாம்புகளை கொண்டுள்ள உறைவிடம்தான் ப்ரேஸில். மனிதனின் உடலையே தனது விஷத்தால் உருக வைக்கும் கோல்டன் லேன்ஸ்ஹெட் வைபர் பாம்புகளும் இங்கே உள்ளன. இதனால் இந்த தீவுகளுக்குச் செல்ல யாரும் அஞ்சுவர்.

நியூ மெக்ஸிகோ:
மனிதனையும் விலங்குகளையும் கலந்து ஒரு புதுவகை உயிரினத்தை உருவாக்கி இங்கேதான் உலவ விட்டுள்ளனர். மனிதனையும் வேற்று கிரக வாசிகளையும் கலந்து உருவான கலப்பு உயிரினங்களும் இங்கே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இங்கே செல்ல யாரும் விரும்புவது இல்லை. நியூ மெக்ஸிகோவின் சில பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாகவும் இருக்கின்றன.

சீனா – குயின் ஷி ஹூங் கோட்டை:
சீனாவின் முதல் பேரரசான குயின் ஷி ஹூங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த கோட்டையை பார்த்தாலே பயம் தொற்றிகொள்ளும். யாராலும் எளிதில் நுழைந்து விட முடியாது. மிக மிக சிக்கலான கட்டமைப்பை கொண்டுள்ள இந்த கோட்டையில் ராஜா காலத்து ஆவிகளும், பூதங்களும் வாழ்வதாக மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதனாலே அந்த இடத்தை சீன மக்கள் யாரும் நினைத்துப் பார்க்கவும் கூட விரும்புவதில்லை.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்