இந்த இடத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

0
25001

மச்சங்கள் பற்றி மக்கள் மத்தியில் பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. மச்சங்கள் அதிர்ஷ்டத்தை தருவன என்றும் கூறுவார்கள். அதிலும் குறிப்பாக 5 இடங்களில் மச்சம் இருந்தால் யோகங்கள் கொட்டிக்கொண்டே இருக்கும் என மச்ச சாஸ்திரம் கூறுகிறது.

நெஞ்சு:
நெஞ்சில் மச்சம் கொண்டவர்கள் சுகமான வாழ்க்கையை அனுபவிப்பர். இவர்களது காந்தப் பார்வையால் அனைவரையும் ஈர்க்கும் சக்தி கொண்டவர்களாக இருப்பர். படிப்பிலும், செல்வாக்கிலும் சிறந்து விளங்குவார்கள். அறிவுப்பூர்வமாக எதையும் யோசித்து பின் செயலில் இறங்குவார்கள். தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள். மன தைரியம் கொண்ட துணிச்சலான ஆட்களாக திகழ்வர்.

உள்ளங்கால்:
உள்ளங்காலில் மச்சம் உடையவர்கள் சிறந்த கவிஞராக வலம் வருவர். மொழியார்வம் அதிகம் இருக்கும். மிகுந்த புகழை அடையும் பாக்கியம் இவர்களுக்கு உண்டு. இசை, விளையாட்டு போன்ற கலைத்துறைகளில் இவர்களுக்கு எப்போதுமே வெற்றிதான். அரசு உத்தியோகம் நிச்சயமாக உண்டு. அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வர்.

உள்ளங்கை:
உள்ளங்கையில் மச்சம் கொண்டவர்களை விட புத்திக்கூர்மை கொண்ட ஆட்களை பார்க்க முடியாது. செல்வத்துடனும் செழிப்புடனும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், நிறைவான மனதை கொண்டவர்களாகவும் இருப்பர். நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.

தொப்புள்:
தொப்புளில் மச்சம் உடையவர்கள் உழைக்கும் வர்க்கத்தில் பிறந்திருப்பார்கள். கடின உழைப்பும், நிறைவான வாழ்க்கையும் இவர்களது சிறப்பம்சம் ஆகும். வசதி, வாய்ப்புக்கள் எல்லாம் இவர்களையே தேடி வரும். பேச்சாலே அனைவரையும் கவரும் வித்தகர்கள்.

முதுகு:
முதுகில் மச்சம் உடையவர்களிடம் மில்லியன் லிட்டர் கணக்கில் அன்பும் பாசமும் தேங்கியிருக்கும். பாதுகாப்பான சுற்றுச்சூழலில் வாழ்வார்கள். பண சேமிப்பிலும், செல்வச் சேமிப்பிலும் தட்டுப்பாடே இருக்காது. உயர்வான அந்தஸ்து, செழிப்பான வாழ்க்கை எல்லாமே இவர்களின் காலடியில்தான்.