கிரெடிட், டெபிட் கார்ட்டு இனிமேல் செல்லாது!

0
751

முன்பு கால் வலிக்க வங்கியில் பணம் எடுப்பதற்கு அல்லது செலுத்துவதற்கு நின்று கொண்டியிருந்தோம். பிறகு டெபிட் கார்ட்டு வந்த பிறகு ஏ.டி.எம் களில் பணம் எடுத்து வந்தோம். பிறகு அதிலே பணம் செலுத்தும் வசதியும் அரசு கொண்டு வந்தது. இதனால் வங்கிகளில் நீண்ட நேரம் பண பரிவர்த்தனைக்காக காத்துகிடந்தது மாறி எளிமையானதாக இருந்தது. இந்த டிஜிட்டல் வேலைகளுக்கு நமது டெபிட் கார்ட்டு மற்றும் கிரெடிட் கார்ட்டு மிகவும் அவசியமாக தேவைப்பட்டது. அதனை மேலும் எளிமையாக்கும் புதிய பரிவர்த்தனை செய்ய திட்டமிப்பட்டுள்ளது. இது குறித்து நிதி ஆயோக் தலமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் கூறியதாவது. மக்களின் மொபைல் போன் தொலைபேசி மூலம் அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் மக்கள் தொகையின் 72 சதவீதம் பேர் 32 வயதுக்குட்பட்டவர்களா இருப்பதால், புதிய தொழில்நுட்பங்களை வேகமாக கற்றுக் கொள்ள முடிகிறது. படிப்படியாக அடுத்த 4 ஆண்டுகளில் கிரிடிட் கார்ட்டு மற்றும் டெபிட் கார்ட்டுகள் தயாரிப்பு குறைக்கப்படும் மற்றும் வங்கிகளுடன் மொபைல் எண்கள் இணைக்கப்படுவதால் அதன் மூலமே அனைத்து பரிவர்த்தனைகளும் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்