பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் முக்கிய தோற்றத்தில் நடிக்க போவது யார் தெரியுமா..?

0
18831

அட்டகத்தி, மெட்ராஸ், காபாலி என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் மாற்றத்தை விதைத்த இயக்குனர்களில் முக்கியமானவரான பா.ரஞ்சித்.

அரசியலை பேசும் படமாக இருக்கும் அவரது படங்களில் அடுத்து ரஜினி நடிப்பில் காலா படம் வெளிவர உள்ளது. காலா படமும் அரசியல் பேசும் படமாக இருக்கும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது டப்பிங் வேலைகள் நடைப்பெற்றுக் கொண்டியிருக்கின்றன.

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் முக்கிய தோற்றத்தில் நடிக்க போவது யார் தெரியுமா..?

இந்நிலையில் பா.ராஞ்சித்தின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் குஜராத் சட்ட மன்ற சுயேட்சை எம்.எல்.ஏ வாக இருக்கும் ஜிக்னேஷ் மேவானி நடிக்கிறார். ஒரு எம்.எல்.ஏ. படத்தில் நடிப்பது பெரிய விஷயமா என்று கேட்டால் இல்லை ஆனால் ஜிக்னேஷ் மேவானி நடிப்பது நிச்சயம் பெரிய விஷயம்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க விட மிக அதிகமான வாக்குவித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது தான் அனைவரும் திரும்பி பார்க்க வைத்தது.

குஜராத் மாநிலத்தில் தலித்துகளுக்காக போராடும் ஜிக்னேஷ் மேவானி பா.ரஞ்சித் படத்தில் கவுர தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். ஜிக்னேஷ் அண்மையில் சென்னைக்கு வந்தபோது ரஞ்சித்தை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் மோடிக்கு சிம்ப சொப்பனமாக இருந்த ஜிக்னேஷ் தமிழ் படத்தில் நடிக்கவிருப்பது கோலிவுட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. படத்தை துவங்கும் முன்பே அது குறித்து ரசிகர்களிடையே ஆவல் ஏற்பட்டுள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்