இப்படியும் ரயிலை பார்க் பண்ணலாம்… நாகர்கோவிலில் அதிசயம்!

0
490

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு செல்லும் சிறப்பு ரயில் வண்டி வித்தியாசமான முறையில் தபால் நிலையத்தில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் வண்டி ஒவ்வொரு ஞாயிற்று கிழமை இரவும் 7:3௦ மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கிளம்ப தயாராக இருந்த இந்த சிறப்பு ரயிலானது, சில வினாடிகளுக்கு முன்பாக இயக்க பரிசோதனைக்கு உட்பட்டது. நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு உள்ளேயே இந்த பரிசோதனை நடைபெற்றது.

ரயில் பின்னோக்கி இயக்கப்பட்டபோது, பின்புறம் இருந்த பெட்டிகள், தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு தபால் நிலைய கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தபால் நிலைய சுவர் பலத்த சேதம் அடைந்தது. ரயில் பெட்டிகளும் சேதம் அடைந்தன. தபால் நிலையத்திற்கு அருகில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் சேதம் அடைந்துள்ளன. இவ்விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்