அடுத்த சிக்கலில் ‘மெர்சல்’… கலக்கத்தில் படக்குழுவினர்!

0
115
விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உண்டான தெறி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து இவர்களது கூட்டணியில் உருவகியுள்ள படம் ‘மெர்சல்’, இதன் டிசர் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது. தீபாவளிக்கு திரையிட இருந்த பட குழுவினருக்கு வழக்கம் போல் ஒரு பிரச்சினை வந்தது. படத்தின் பெயரில் பஞ்சாயத்து நடக்க அதனையும் ஓரளவு மல்லுக்கட்டி சமாளித்து படக்குழு. தற்போது புதிய பிரச்சினை ஒன்று தலைதூக்கி இருக்கிறது. தமிழகத்தை போல கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர் பட்டாளம் அதிகம். சொல்ல போனால் தலையை விட தளபதிக்கு தான் அங்கு மவுசு அதிகம் எனலாம். சமிபத்தில் வெளியான விஜயின் பைரவா  படம்  கேரளாவில் எதிர்பார்த்த அளவு இலாபம் தராமல் போய்விட்டது. இதனால் பட விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை தழுவினர்கள். பைரவா நஷ்டத்தை ஈடுசெய்தால் மட்டுமே மெர்சல் படத்தை கேரளாவில் திரையிடுவோம் என தெரிவித்துள்ளார்கள். இதனால் கலக்கத்தில் உள்ளனர் மெர்சல் படக் குழுவினர். இந்த அறிவிப்பால் கேரள விஜய் ரசிகர்களும் முகம் சுழித்துள்ளனர்.
SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்