ஒவ்வொரு ஆணுக்கும் “AAA” தேவை… இதை படிங்க பாஸ்…!!

  0
  604

  உடல் அமைப்புகளால் மட்டுமே ஆண்-பெண் இருவரும் வேறுபட்டுள்ளனர். இருவரும் இணைந்துதான் உலக வாழ்க்கையின் இயக்கத்திற்கு சமமான பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் இல்லாமல் மற்றொருவரது இயக்கம் என்பது சாத்தியபடாத ஒன்றுதான். பெரும்பாலும் ஆணாகப்பட்டவன் பெண் என்பவளை உடலிலும், நெஞ்சத்திலும் சுமந்து வாழ்வியலின் பொருள் தேடுகிறான். இவ்வாறு இருக்கையில் பெண் என்பவள் தனது ஆண் துணையிடம் மூன்று முக்கியமான விடயங்களை எதிர்பார்க்கிறாள். அது என்ன என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து படிக்கலாம் வாருங்கள்.


  அன்பு [Anbu]:

  உறவுகளில் வலிமை மிகுந்த ஆயுதமாகவும், நேர்மறை சக்திகளை கொண்டதாகவும் திகழ்வது அன்பு என்ற ஆயுதம்தான். அன்பினை மட்டும் கொண்டு எப்பேற்பட்ட கருங்கல் மனதையும் உருக வைத்து விடலாம். எவ்வளவு சண்டை வந்தாலும் ‘ஏய் ஜிங்க்லீ’ என அன்போடு கூப்பிட்டுப் பாருங்கள், அவள் ஓடி வந்து மார் சாய்வாள்.  ஆண்-பெண் உறவில் அன்புதான் முதல்நிலை இன்பம். ஒருவர் மீது ஒருவர் அளவுகடந்த அன்பினை பரிமாறிக்கொள்ள வேண்டும். ஆண் என்பவன் பெண்ணுக்கு தாழ்ந்து போய் தனது பேரன்பினை வெளிப்படுத்துவதில் தவறே இல்லை.

  உங்க கருத்தை தெரிவிக்கலாம்