மீனம் : சனி பெயர்ச்சி பலன்கள் 2017

 

மீன ராசி அன்பர்களே!, இதுவரை பாக்கிய, பிதுர் ஸ்தானத்திலிருந்து பாதிப்பை தந்து வந்த சனி பகவான் இனிமேல் பத்தாம் பாவமான கர்ம ஸ்தானத்தில் அமர்ந்து செயலாற்ற போகிறார். பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் பாபர் இருப்பது நல்லது என்ற அடிப்படையில் “10-ல் ஒரு பாவியேனும் இருக்க வேண்டும்”, என்ற ஜோதிட பழமொழி குறிப்பிட்டாலும் கோட்ச்சாரதில் 10-ஆம் இடத்து சனி பாதிப்பையே தருவார்.

மீன ராசி அன்பர்களுக்கு லாப விரயாதிபத்யம் பெற்றவராக ஆவதால் தொழில் வழி லாபங்களை தருவது போல கொடுத்து கெடுத்து விடுவார். தொழில், வியாபாரம் ,வேலை என்ற வகையில் மாற்றம்; மற்றும் பாதிப்பை தருவார். சுயத் தொழில் செய்பவர்கள் இனி சஞ்சார காலம் முடியும் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தொழிலில் நஷ்டமும், இறக்கமும் போட்டி பொறாமையும், தொழில் முடக்கமும் ,தேக்க நிலையும் இனி உண்டாகும். தொழிலில் வரவு இருக்காது முதலுக்கே மோசம் வரலாம். எனவே 10-ம் இடத்தில சனி உள்ளவரை தொழிலில் முதலீடு, அபிவிருத்தி செய்தல் கூடாது. இருப்பதை தற்காத்து கொள்ள வேண்டும். ஊழியர்கள், வேலையாட்கள், பங்குதாரர்களால் பாதிப்பை அடைவீர்கள். உத்தியோகத்தில், வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உறுதி.

கடுமையாக உழைக்க வைத்து குறைந்த வருமானம் தரும். பெயரும், புகழும் கெடும். வேலையில் பெயர் வாங்குவீர் அதற்கான பலனை பிறரே அனுபவிப்பார். திசா புத்தி தீமையாக கோட்ச்சாரதில் சனி 10-ல் உள்ளவர்களுக்கு பதவி பறிபோவதுடன் சிறைச்சாலை செல்லவும் வைக்கும். நேர்மையாக வாழ்வதும், பிறர்க்கு உதவி வாழ்தலும், இறை வழிபாடும், சமூக சேவை செய்தலும், திருமால் ஹனுமான் வழிபாடும் சிரமத்தை குறைக்கும்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்