குளிப்பைதை வீடியோ எடுத்து மீரட்டியதால் குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்ற பெண்!

0
430

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பெண் தீடிரென குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்றுள்ளார். உடனே அருகில் இருந்த போலிஸ் அந்த பெண்ணை தடுத்து காப்பாற்றியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அனிதா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த இவர் தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளார். அவரை காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்தனர். போலிஸ் அவரிடம் விசாரித்த போது, அதிர்ச்சியான தகவலை தெரிவத்தார். தன் வீட்டிறிக்கு அருகில் வீடியோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார் ராசி என்பவரது மகன் வெற்றிவேல். ஒரு நாள் தன் குளிப்பதை மறைந்தியிருந்து வீடியோ எடுத்துள்ளார். தான் சொல்வதை கேட்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதே போல் தன்னிடம் இருந்து 16 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் வரை இதுவரை பறித்துக் கொண்டுள்ளார் வெற்றிவேல். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வருகிறார் என தெரிவித்துள்ளார். அவனின் மிரட்டலை சமாளிக்க முடியாமல் தற்போது தீ குளிக்க முயன்றேன் என தெரிவித்துள்ளார். அவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் வெற்றிவேலனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்