மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீவிபத்துக்கு காரணம் யார் தெரியுமா?

0
3245

சிலப்பதிகார காப்பியத்தில் கண்ணகிதான் முதலில் மதுரை நகரை சாபமிட்டு எரித்தாள். சில நூற்றாண்டுகளுக்குப் பின் இப்போது மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பெரும் தீ பற்றியிருக்கிறது.

ஆயிரங்கால் மண்டபம்:
இந்த தீ விபத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்றாலும், ஆயிரங்கால் மண்டபம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மண்டபத்தில் ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டு இடிந்து விழுந்துள்ளன. இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் எல்லாம் நாட்டில் அக்கிரமும், அநீதியும் தலைதூக்கும்போதுதான் ஏற்படும். தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் நிகழ்ந்துள்ள அக்கிரமங்கள்தான் இந்த தீவிபத்திற்கு காரணம் என டிவிட்டரில் கருத்துகள் எழுந்துள்ளன.

திருச்செந்தூர் சம்பவம்:
கடந்த சில நாட்களுக்கு முன்னர், முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் கோயிலில் கட்டிடம் இடிந்து விழுந்தது. அதில் ஒரு பெண் உயிரிழந்தார். இப்போது மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. புராதன சின்னங்களில் ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவங்களால், நாட்டிற்கோ அல்லது நாட்டுத் தலைவர்களுக்கோ ஆபத்து ஏற்படலாம் என்று மதுரை மாநகர் மக்கள் அஞ்சுகின்றனர்.

மக்கள் கருத்து:
ஹெச் ராஜா, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர், நித்தியானந்தா சீடர்கள்,விஜயேந்திரர் செயல்களால் மதுரை மீனாட்சியம்மன் உக்கிரமாக உள்ளார், அதன் வெளிப்பாடே இந்தத் தீ! இவர்கள் எல்லாம் தங்கள் செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டால் அம்மனின் கோபம் குறையலாம் என மக்கள் கருதுகின்றனர்.

 

 

உங்க கருத்தை தெரிவிக்கலாம்