தமிழ்நாட்டு மக்களுக்கு 2 நற்செய்திகள்!

0
350

தமிழகத்தில் உள்ள வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள் அவ்வபோது போரடாடி வந்துள்ளனர். நம் எதிர்கால சந்ததிக்கு இந்த இயற்கை வளங்கள் மிகவும் இன்றியாமையாதது. இப்போது தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளையும், கிரானைட் குவாரிகளையும் மூட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற ஆணை:

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் 6 மாதத்துக்குள் மூடப்படவேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மணல் குவாரிகளால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கோடைகாலங்களில் தண்ணீர் பற்றாகுறையால் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் விவசாயம் போன்ற அடிப்படை தொழில் செய்ய முடியாத சூழலும் நிலவி வருகிறது.

கிரானைட் குவாரிகளும் மூடல்:

மணல் குவாரிகளை தொடர்ந்து கிரானைட் குவாரிகளையும் மூட கோரி விசாரிக்கப்பட்ட பொதுநல வழக்கில், தமிழகத்தில் உள்ள கிரானைட் குவாரிகள் படிப்படியாக மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜல்லிக்காக மட்டுமே கிரானைட் குவாரிகள் இயக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதுவும் தொடர்ந்து அந்த குவாரிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

இந்த இயற்கைவளங்கள் பாதுகாத்தால் மட்டுமே நமது அடுத்த தலைமுறைனர்கள் நலமுடன் இருப்பார்கள். விசவாயம் இயற்கை வருங்கால சந்ததியினார் காக்கவே இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டது என்று வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்தார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்