கள்ள காதலை நியாப்படுத்துகிறதா ‘லக்ஷமி’ குறும்படம்?

0
459

ஒரு குறும்படம் சமூக வலைதளங்களில் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் சர்ஜுன் இயக்கத்தில் வெளியான ‘லக்ஷ்மி’ குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சர்ஜுன் இயக்கிய இந்தப் படத்தில் லக்ஷ்மி ப்ரியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் மீதான விமர்சனங்களால் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. பெண் சுதந்திரம் பற்றிப் பேசுவதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அபத்தமான காட்சிகள் இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. பாரதியாரின் வரிகள் இந்தக் குறும்படத்தில் முக்கியமான கருத்துப் பதிவுக்காகப் பாடலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தக் குறும்படத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பல மீம்களும் உலவி வருகின்றன. காலையில் கணவருக்கு முன்னாடியே எழுந்து கணவருக்கு சாப்பாடு, குழந்தையை பள்ளிக்கு அனுப்பி பிறகு தான் கிளம்பி வேலைக்கு போகிறாள் லக்ஷமி. ரயில் பயணத்தின் போது கதிர் என்னும் ஒவியரை சந்திக்கிறாள். இவர்களது நட்பு மனதில் சிறு காதலாக மாறி உடறுவில் ஈடுபடுகிறாள். 18 நிமிசம் இருக்கும் இந்த குறும்படம் மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. இப்படத்தில் லக்ஷமியின் கணவரும் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். அதையும் சுட்டிக்காட்டியுள்ளார் இயக்குனர். வேலைக்கு செல்லும் பெண்கள் தான் படும் இன்னல்களையும் குடும்ப சூழலையும் பெண்ணியம் குறித்த கருத்தை மையமாக கொண்டு இந்த குறும்படம் வெளியாகியுள்ளன. பெண்ணியம் கருத்துக்கு பல எதிர்கருத்தையும் சந்தித்து வருகிறது லக்ஷமி குறும்படம்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்