எம்.எல்.ஏ-வை சற்றும் யோசிக்கமால் திருப்பி அறைந்த பெண்!

0
188

இமாசலப் பிரதேச மாநிலத்தில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து ஆலோசிக்க தலைகர் ஷம்லாவில் ஆலோசலை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.  இந்த கூட்டம் நடைபெறும் இடத்தில் தீடிரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்பபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆஷா குமாரியை போலிஸ் உள்ளேவிடாமல் தடுக்க வேண்டிய சூழல் நிலவியது. இதனால் ஆத்திரமடைந்த ஆஷா குமாரி பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீஸைக் கன்னத்தில் அறைந்தார். சற்றும் யோசிக்காத அந்தப் பெண் போலீஸ் எம்.எல்.ஏ-வை திருப்பி கன்னத்தில் அறைந்தார். அவர் அறைந்த வீடியோ தற்போது ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு எம்.எல்.ஏ-வை திருப்பி கன்னத்தில் அறைந்து சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்