ரஜினியை தொடர்ந்து கமலும் இணைய தளத்தை தொடங்கினார்..!

0
104

தமிழகத்தில் நிலவும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவதாக தெரிவித்தனர். அதற்காக ரஜினி பாபா முத்திரையுடன் ரஜினி மக்கள் மன்றம் என்று இணையதளைத்தை உருவாக்கினார். சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட தயாரகுங்கள் என்று ரசிகர்களுக்கு தெரிவித்து அமைதி காத்து வருகிறார்.

அதே போல் கமல் 21 கட்சியின் பெயரை அறிவித்து அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கப் போவதாக தெவித்தார். அன்று மாலை மதுரையில் மிக பெரிய பொதுக் கூட்டத்தில் பேச போவதாகவும் அறிவித்தார்.

தற்போது அமெரிக்காவில் ஹவார்ட் பல்கலைகழகத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டும் உள்ளார். அதனால் அவரது மன்ற நிர்வாகிகள் இன்று தேர்தல் ஆணையத்தில் கட்சி தொடங்குவதற்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தனர்.

ரஜினியை தொடர்ந்து கமலும் இணைய தளத்தை தொடங்கினார்..!

இந்நிலையில் “நாளை நமதே.மையம்” என்ற இணையதளத்தை கமல் தொடங்கினார்.
தன்னார்வலர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இதில் இணையலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். தன்னார்வலர்கள், சிஎஸ்ஈஆர், என்ஜிஓ, அடுக்குமாடி குடியிருப்பு என 4 பிரிவுகளில் பதிவு செய்யலாம். கல்வி, கொழில் சுற்றுச்சூழல்,வேளாண் துறை, நீர் மேலாண்மை, உள்ளிட்ட துறைகளில் பதிவு செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

உங்க கருத்தை தெரிவிக்கலாம்