அஜித்தை கிண்டல் செய்த இந்தி நடிகர்.. கொதித்து எழுந்த விஜய் ரசிகர்கள்!

0
4425

உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது அஜித்தின் விவேகம் திரைப்படம். அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருமே பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர் இப்படத்தை. கமலஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் அஜித்திற்கும் இயக்குநருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துவரும் இவ்வேளையில் இந்தி நடிகர் என சொல்லிக்கொள்ளும் கமால்கான் டிவிட்டரில் அஜித்தை அப்பா போன்றவர் என்று கிண்டலடித்து கலாய்த்துள்ளார்.

இந்தியில் ஒன்றும் அவ்வளவு பிரபலமான ஆள் இல்லையென்பதால் முன்னணி நட்சத்திரங்கள், பெரியளவில் வெளியாகும் படங்கள் குறித்து வாய்க்கு வந்ததை பொதுவெளியில் பேசி தனக்கு தானே விளம்பரம் தேடிக்கொள்வதுதான் இந்த காமால் கானின் பழக்கம். எளிமையாக சொன்னால் இவர் ஒரு பாலிவுட்டின் பவர் ஸ்டார்.

அண்மையில் மலையாள சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் மோகன் லாலை விமர்சித்து கேரள ரசிகர்களால் ஓட ஓட விரட்டப்பட்டு, கடுமையாக விமர்சிக்கப்பட்டு இறுதியாக சரணடைந்தார். பாகுபலி படம் வெளியாகும்போது பிரபாஸ் மற்றும் ராணாவை விமர்சித்திருந்தார். ரஜினி, ஐஸ்வர்யாராய், விராட் கோஹ்லி, அனுஷ்கா ஷர்மா என இவரது ஓட்டை வாயில் சிக்காத பிரபலங்களே இல்லை எனலாம்.

இப்போது விவேகம் படத்தை வைத்து, நடிகர் அஜித்தை வயதானவர் என்றுள்ளார். அப்பா வேடங்களில் நடிக்க வேண்டிய அஜித்தை எப்படி தமிழ்நாட்டு மக்கள் ஹீரோவாக ஏற்றுக்கொள்கிறார்கள்? என்று கிண்டலாக ட்வீட் போட, நம் தமிழ் ஆடியன்ஸ் அவரை கமெண்ட்டில் வச்சி செய்துவிட்டனர்.

அது எப்படி ஒரு தமிழ் நடிகரை நீங்கள் இப்படி விமர்சிக்கலாம்? என்று கேட்டு தல ரசிகர்கள் ஒருபுறமும், தளபதி ரசிகர்கள் ஒருபுறமும், தல-தளபதி ரசிகர்கள் ஒருபுறமும், ஜெனரல் ஆடியன்ஸ் ஒருபுறமும் என நாலாபுறமும் கமால் கானை ஓட்டித்தள்ளிவிட்டனர்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்